முதலில் ஜைன மதத்தை பற்றி பேசுவோம். ஜைன மதம் பற்றி பல பேர் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளார்கள். எனவே அதை பற்றி தெளிவாக பார்த்துவிடுவது என்று ஒரு கருத்து எனக்கு தோன்றியது. இதற்கு காரணம் பிறப்பால் நான் ஒரு ஜைனன். ஜைன கலாச்சாரங்களை நேரடியாய் அறிந்து கொள்ளவும், ஜைன சமுதாய மக்களுடன் பழகவும், தமிழ் ஜைன அறிஞர்களுடன் கலந்துரையாட, ஜைன ஆலயங்களுக்கு செல்ல, ஜைன நூல்களை பயில இயற்கை ஒரு வாய்ப்பு வழங்கிஉள்ளது. மேலும் இந்திய ஜனநாயகம் மற்றும் சட்டம் நான் விரும்பும் மதத்தை பின்பற்ற, பயில அனுமதித்துள்ளது.
நான் கண்ட வரையில் ஒரு சிலரை தவிர பெரும்பாலோர் மதத்தை தேர்ந்தெடுப்பதில்லை. பெற்றோரை நீங்கள் எப்படி தேர்ந்து எடுப்பது இல்லையோ அதே போல் பிறக்கும்போது யாரும் மதத்தை தேர்ந்தெடுப்பதில்லை. பின்னாட்க்களில், வாய்ப்பு கிடைத்தாலும், பிழைப்பின் காரணமாய், மதத்திற்கு யாரும் முக்கியம் கொடுப்பதில்லை.
உங்களில் யாரேனும், புனித நூற்களான பகவத் கீதை, திருக்குரான், பைபிள், தத்வார்த்த சூத்ரம் அல்லது அங்கம், தம்மபதம், க்ரந்தம் ஆகியவற்றை ஒன்று விடாமல் படித்து, பிறகு, எனக்கு பிடித்தது இந்த மதம்தான் என்று தேர்ந்து எடுத்தீரா? அப்படி என்றால் எனக்கு தயவு செய்து எழுதுங்கள்..அடுத்த கட்டுரைகளில் காண்போம்.. அது வரை...நலமுடன் வாழ இறைவனை இறைஞ்சும்.. அன்பு..த.வர்த்தமானன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment